சென்னை: ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்ட நிலையில், கூல் சுரேஷ் புதிய நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் செல்அம் இயக்கும் புதிய படத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்துக்கு ‘மஞ்சள் வீரன்’ என தலைப்பிடப்பட்டது. நாயகன் தவிர்த்த மற்ற கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாக இயக்குநர் செல்அம் தெரிவித்தார். மேலும் படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாக அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் செல்அம். அதற்கான காரணத்தை அவர் கூறும்போது, “டிடிஎஃப் வாசன் உரிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. அவருடைய கவனம் வேறு பக்கம் உள்ளது” என்றார்.
ஆனால், இதுபற்றி இயக்குநர் தன்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் ஃபோட்டோஷூட், பூஜைக்கெல்லாம் தான் செலவு செய்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் டிடிஎஃப் வாசன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக பேச பலமுறை இயக்குநரை அழைத்தும் அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் கூறியிருந்தார் வாசன். இந்நிலையில் இந்தப் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இணைந்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ புகைப்படமும் வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago