பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ பட முதல் தோற்றம் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடிக்கிறார் பிரதீப். இதைத் தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘டிராகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். ’ஓ மை கடவுளே’ படத்துக்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் தோற்றம் எப்படி?: கல்லூரி பேருந்து ஒன்றின் மேல் தளத்தில் லுக்கி அணிந்து கொண்டு கையில் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு புகை பிடிக்கிறார் பிரதீப். கூலிங் க்ளாஸ், சுருட்டை முடி என அவரது கெட்டப் கவனம் பெறுகிறது. அந்த பேருந்தில் ‘வொர்ஸ்ட் ஸ்டூடண்ட்’ என எழுதப்பட்டுள்ளது. 2கே கிட்ஸ் தலைமுறையை கவனத்தில் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதை போஸ்டர் மூலம் கணிக்க முடிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

மேலும்