திருவனந்தபுரம்: “ஹேமா கமிட்டி அறிக்கையில் எதையும் அரசு மறைக்கவில்லை. இது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன்” என கேரள கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சஜி செரியன், “மலையாள திரையுலகில் நிகழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவது குறித்த சாத்திய கூறுகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. விரிவான திரைப்பட கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான மாநாடு ஒன்றை நடத்தவும் அரசு உத்தேசித்து வருகிறது. புதிய திரைப்பட கொள்கைகளை உருவாக்குவது குறித்து அமைக்கப்பட்ட குழு தனது ஆரம்பக்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த புதிய திரைப்பட கொள்கை முழுமைப்படுத்தப்பட்டு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசிய அமைச்சர், “ஹேமா கமிட்டி அறிக்கையில் எதையும் அரசு மறைக்கவில்லை. இது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago