‘நந்தன்’ படத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் இரா.சரவணன் பதிலடி கொடுத்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நந்தன்’. இந்தப் படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் உடல் அடக்கம் செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றது. ‘இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா?’ என்றெல்லாம் இணையத்தில் கேள்வி எழுப்பினார்கள்.
» சென்னை குறளகத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்
» சாம்சங் தொழிலாளர் வேலைநிறுத்தம்: முதல்வர் தலையிட வலியுறுத்தி அக்.5-ல் சென்னையில் போராட்டம்
இது தொடர்பாக இரா.சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில், “பட்டியலினப் பெண் ஒருவரை அடக்கம் செய்ய விடாமல் ஆதிக்க சாதியினர் தடுக்கும் காட்சி ‘நந்தன்’ படத்தின் துயரமான பதிவு. அதைப் பார்த்த சிலர் ‘இப்படியெல்லாமா நடக்கிறது?’ எனக் கேட்டார்கள். இன்னும் சிலரோ, ஏதாவது ஒரு மூலையில் நடந்ததைப் பூதாகரப்படுத்தி பரபரப்பு கிளப்புவதாகப் பரப்பினார்கள்.
படத்தின் துயரத்தை விஞ்சுகிற அளவுக்கு பட்டியலினப் பெண் ஒருவருக்கு நிஜத்தில் நடந்திருக்கிறது. கேலி பேசியவர்களும். கேள்வி கேட்டவர்களும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்துக்கு போய் வாருங்கள்… சமூகநீதியை நேரில் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுடன் தண்டாரம்பட்டு வீடியோ பதிவினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Loading...
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago