ஜேகே பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பிரபாத் தயாரித்து நடிக்கும் படம், ‘கருப்பு பெட்டி’. தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.தாஸ் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்.
மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்குக் கருப்பு பெட்டி என்பது முக்கியம். விபத்து நடந்தால் அதைத்தான் முதலில் தேடுவார்கள். இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம். 2 மணி நேர படம்தான். திரைக்கதை போரடிக்காமல் செல்லும்.
தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. ஹீரோ கே.பிரபாத், ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இதில் அவரது நடிப்பு பேசப்படும். அக்.18-ம் தேதி படம் வெளியாகிறது. இவ்வாறு இயக்குநர் தாஸ் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago