‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம் ஏன்? - இயக்குநர் விளக்கம்

By ஸ்டார்க்கர்

சென்னை: ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

முன்னணி யூடியூபர் டி.டி.எஃப் வாசன் நாயகனாக அறிமுகமாக இருந்த படம் ‘மஞ்சள் வீரன்’. செல்அம் இயக்கவிருந்த இந்தப் படத்தை தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரித்து வந்தார்கள். டி.டி.எஃப் வாசன் மற்றும் செல்அம் இணைந்து பல்வேறு பேட்டிகள் அளித்தார்கள். அவை அனைத்திலுமே டி.டி.எஃப் வாசனை பெருமளவு புகழ்ந்து தள்ளினார் செல்அம். அதிவேக பயணம், கார் ஓட்டும்போது செல்போனில் பேசியது, பைக் விபத்து உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் டி.டி.எஃப் வாசன். தற்போது இயக்குநர் செல்அம் அவரை ‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்.

இது தொடர்பாக செல்அம் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து டி.டி.எஃப் வாசன் முழுமையாக நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கவுள்ளார். அந்த அறிவிப்பு அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும். டி.டி.எஃப் வாசனுக்கு பல வேலைகள் இருப்பதால், அவருடன் பயணிப்பது ஒத்துவரவில்லை. அவர் கைது செய்யப்பட்டது எல்லாம் சில நாள் தான், பல நாள் அல்ல. அது ஒரு காரணம் அல்ல. அவர் மனரீதியாக படைப்புடன் இல்லை. ஆகையால் படத்திலிருந்து நீக்கிவிட்டேன்.

படத்தில் வில்லன், அம்மா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. நாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. புதிய நாயகனை வைத்து காட்சிகளை படமாக்கி விட்டு, உடனே வெளியிடுவேன். ‘மஞ்சள் வீரன்’ ஒரு வாழ்வியலை பேசும் படம். அதனால்தான் அவர் எங்களுடனே இருந்து நடிக்க வேண்டும் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. இன்னும் டி.டி.எஃப் வாசனிடமே நீக்கியதை சொல்லவில்லை. நாயகன் தான் மாற்றப்பட்டுள்ளார்.

தலைப்பு ‘மஞ்சள் வீரன்’ தான். அதில் மாற்றமில்லை. டி.டி.எஃப் வாசனையே வேண்டாம் என்கிறேன் என்றால் அவரை விட பெரிய ஆள் ஒருவரை தான் நாயகனாக ஒப்பந்தம் செய்வேன். டி.டி.எஃப் வாசன் நீக்கத்துக்கு ஜோயா காரணம் அல்ல. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. நான், தயாரிப்பாளர் என அனைவருமே சேர்ந்து எடுத்த முடிவு தான் டி.டி.எஃப் வாசன் நீக்கம். அவருடைய ரசிகர்களிடம் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் நடிக்க இருப்பவரை இன்னொரு டி.டி.எஃப் ஆக கொண்டாடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். டி.டி.எஃப் வாசன் என்றைக்குமே என் அன்பு தம்பி தான். அவருடனான நட்பு தொடரும். படத்தில் மட்டுமே பிரிந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்