சென்னை: ’கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இதுவரை ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
‘கனா’, ‘எப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநரும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து’. ‘சர்தார்’, ‘ரன்பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், ‘கெத்து’ தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அபரிவிதமான வரவேற்பை பெற்றது. கொண்டாடி தீர்த்தனர். இடையில் பல்வேறு படங்கள் வெளியான போதிலும், ‘லப்பர் பந்து’ படத்துக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை. முதல் நாளில் லட்சம் என்ற அளவில் தொடங்கிய வசூல் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, வார இறுதியில் படத்துக்கு ஹவுஸ் ஃபுல் என்ற அளவில் புக்கிங் இருந்தது. இதனால் ரூ.5 கோடி பட்ஜெட் கொண்ட இந்தப் படம் வெளியான 11 நாட்களில் ரூ.20 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் ‘லப்பர் பந்து’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago