‘விஜய் 69’ நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம்: அக்.5-ல் படப்பிடிப்பு

By ஸ்டார்க்கர்

சென்னை: விஜய் நடிக்க உள்ள 69-வது படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.

வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இன்று (அக்டோபர் 1) முதல் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளன. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய உள்ளார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

5-ம் தேதி முதல் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பெரும்பாலான காட்சிகளை பிரம்மாண்ட அரங்கு ஒன்றில் படமாக்க உள்ளார்கள். அதனை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் ஹெச்.வினோத். அது முடிவானவுடன் அந்த அரங்கின் பணிகள் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்