“எனக்கு நான்தான் போட்டியாளர்” - ‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் பிரியங்கா

By செய்திப்பிரிவு

சென்னை: “எனக்கு நான் மட்டும்தான் போட்டியாளர். அன்று ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் தோற்றேன். 10 ஆண்டுகள் கழித்து இன்று ‘குக் வித் கோமாளி’ கோப்பையை கையில் வைத்திருக்கிறேன். உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என ‘குக் வித் கோமாளி’ சீசன் 5-ல் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

பிரபல சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பிரியங்கா டைட்டில் வின்னராகியிருக்கிறார். இதையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “குக் வித் கோமாளி சீசன் 5-ன் டைட்டில் வின்னராக, என்றென்றும் உங்களுக்கு சிறப்பான தருணங்களை ஏற்படுத்திக் கொடுப்பேன். என்னை சுற்றியிருப்பவர்களை எப்போதும் சவுகரியமாக உணர வைப்பதில் பெருமை கொள்கிறேன். அன்று சிக்கனை சரியாக சமைக்க தெரியாததால் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் தோற்றேன். 10 ஆண்டுகள் கழித்து இன்று ‘குக் வித் கோமாளி’ கோப்பையை கையில் வைத்திருக்கிறேன்.

பறப்பது, நடப்பது, நீந்துவது என அனைத்தையும் என்ன சமைக்க முடியும் என்பதை தைரியமாக சொல்வேன். எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கு நன்றி. எண்ணெயின் சத்தத்தை கேட்டும், மசாலா வாசனை நுகர்ந்தும், சமையலில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். ஆனால், நான் செய்த சமையலில் பெரும்பாலானவற்றை என்னாலேயே சுவைக்க முடியவில்லை. அந்த வகையில் செட்டில் இருந்த ஒவ்வொரு குக்கும், கோமாளியும், நண்பர்களும் எனது உணவை பல முறை ருசித்தனர். நான் சமைத்ததில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி என்னை சிறந்த சமையல்காரராக மாற்றிய அனைவருக்கும் நன்றி.

எனக்கு எப்போதும் நான் மட்டும் தான் போட்டியாளர். கிச்சன் சூப்பர் ஸ்டாரில் என்னால் எதை செய்யமுடியாமல் போனதோ அதனை இப்போது குக் வித் கோமாளியில் செய்து காட்டியிருக்கிறேன். நான் சிக்கனோ, பலியாடோ, சிறிய மீனோ அல்ல. என்னை நோக்கி நீங்கள் சிக்கனை வீசினால் ஒரு நிமிடத்தில் அதனை சமைத்துவிடுவேன்; சிறந்த ஆட்டுக்கால் பாயாவை என்னால் சமைக்க முடியும். என் மீது நம்பிக்கை வைக்கவும், கடின உழைப்பை கற்றுக்கொடுக்கவும் உறுதுணையாக இருந்த குடும்பத்துக்கு நன்றி.

நீங்கள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த 'குக் வித் கோமாளி' பயணத்தில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும், துணை நின்றவர்களுக்கும், எனக்காக கண்ணீர் விட்டவர்களுக்கும் நன்றி. நான் தினமும் காலையில் எழுவதற்கு நீங்கள் தான் காரணம். டைட்டில் வின்னராக உங்களுக்கான சிறந்த தருணங்களை உருவாக்கி மகிழ்விப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

மேலும்