‘ஹாரி பாட்டர்’ புகழ் டேம் மேகி ஸ்மித் காலமானார்: இரண்டு முறை ஆஸ்கர் வென்றவர்

By செய்திப்பிரிவு

லண்டன்: ஹாரி பாட்டர் படங்களின் மூலம் மிகவும் பிரபலமான மூத்த நடிகை டேம் மேகி ஸ்மித் காலமானார். அவருக்கு வயது 89.

1969ஆம் ஆண்டு வெளியான ‘தி ப்ரைம் ஆஃப் மிஸ் ஜீன் ப்ரோடி’ என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் டேம் மேகி ஸ்மித். அதே போல 1978ல் ‘கலிபோர்னியா சூட்’ படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் வென்றார். மிகச்சிறந்த பிரிட்டிஷ் நடிகைகளில் ஒருவராக போற்றப்படும் இவர், ஏழு முறை ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

‘டவுன்டவுன் அப்பே’ மற்றும் ஹாரி பாட்டர் படங்கள் மூலமாக இளம் தலைமுறையினர் மத்தியிலும் பிரபலமாக இருந்தார் டேம் மேகி ஸ்மித். குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த ப்ரொபசர் மெக்கோனக்கல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது குறித்து ஒரு பேட்டியில் அவர், “ஹாரி பாட்டர் படங்கள் எனக்கு பென்சன் போன்றவை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மார்க்ரெட் ஸ்மித் என்ற இயற்பெயரை கொண்ட அவர் திரைப்படங்களுக்காக டேம் மேகி ஸ்மித் என்ற பெயரை தேர்வு செய்துகொண்டார். தனது சக நடிகரான ராபர்ட் ஸ்டீபன்ஸை 1967ல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள்.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ஸ்மித், இன்று (செப்.27) லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்