யோகிபாபுவின் ‘மிஸ் மேகி’ டீசர் எப்படி? - கவனம் பெறும் கெட்டப்பும், கலகலப்பும்!

By செய்திப்பிரிவு

சென்னை: யோகிபாபு, மாதம்பட்டி ரங்கராஜன் நடித்துள்ள ‘மிஸ் மேகி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - வக்கீலாக இன்ட்ரோ ஆகிறார் யோகிபாபு. சரியாக வாதாட முடியாமல் தவிப்பது, நிறைய கடன் என்ற அவருக்கு அறிமுகம் கொடுக்கப்படுகிறது. இதற்கு மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் - ஆத்மிகா காதல் கதை விரிகிறது. இவரின் திருமணத்துக்கும் பெற்றோர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதற்கிடையில் ஆங்கிலோ - இந்தியன் கெட்டப்பில் மூதாட்டியாக நுழைகிறார் யோகிபாபு. ஆக்‌ஷன் காட்சியும், அவரது கெட்டப்பும் கவனம் பெறுகிறது. இருப்பினும் அந்த அளவுக்கு நேர்த்தியாக இல்லை. மொத்த டீசரும் ஜாலியாக நகர்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

மிஸ் மேகி: லதா ஆர் மணியரசு இயக்கும் இந்தப் படத்தில் ‘மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்