ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள வெங்கடேஷ்வரா திரையரங்கில் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படம் திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கை சூறையாடினர்.
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘தேவரா’. பான் இந்தியா முறையில் இன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் ‘தேவரா’ படத்தின் அதிகாலை 5.30 காட்சிக்காக ரசிகர்கள் 4 மணிக்கு திரையரங்குக்கு வந்துவிட்டனர். மேலதாளம், ஆரவாரத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிகாலை 5.30 மணிக்கு திரையிடப்பட வேண்டிய படம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7.30 மணி கடந்தும் திரையிடப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்க நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திரையரங்கத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். “250 ரூபாய் டிக்கெட்டை ரூ.500 கொடுத்து ப்ளாக்கில் வாங்கி படம் பார்க்க வந்தோம். ஆனால் படம் உரிய நேரத்தில் திரையிடப்படவில்லை” என ரசிகர்கள் குற்றம் சாட்டினர். சிலர் திரையரங்கத்தின் சீட்டுகளை கிழித்தனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் சமரசம் ஏற்பட்டு பின்னர் படம் திரையிடப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க திரையரங்கில் காவல்துறையினர் பாதுக்காப்புப் பணியில் ஈடுப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago