அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அந்தப் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வரும் ‘டிராகன்’ படத்தினை இயக்கி வருகிறார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
‘டிராகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தினை எட்டியிருக்கிறது. டிசம்பரில் வெளியிடலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இருக்கிறது. இந்தப் படத்துக்கு முன்னதாக சிம்புவிடம் கதையொன்றை கூறியிருந்தார் அஸ்வத் மாரிமுத்து.
அந்தக் கதையினை ‘டிராகன்’ வேலைகளை முடித்துவிட்டு இயக்க முடிவு செய்துள்ளார். இதில் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டது. இதனை ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளார்கள்.
» ஸ்ரீவி., விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
» ‘பழநி கோயிலில் அன்னதானம் எப்படி இருக்கு?’ - பக்தர்களிடம் கேட்டறிந்த சட்டமன்ற உறுதிமொழிக் குழு
‘டிராகன்’ வேலைகளை பார்த்துக் கொண்டே, சிம்பு நடிக்கவுள்ள படத்துக்கு இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago