நள்ளிரவு 1 மணிக்கு ‘தேவரா’ முதல் காட்சி: மாலை முதலே கொண்டாட்டத்தை தொடங்கிய ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் 

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ படம் நள்ளிரவு 1 மணியளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மாலை முதலே திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தேவரா’. ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகவுள்ள ஜூனியர் என்.டி.ஆரின் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாளை (செப்.27) வெளியாகும் இந்தப் படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுகிறது. ’ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூனியர் என்டிஆர் படம் திரையரங்கில் வெளியாவதால், அவரது ரசிகர்கள் இந்த படத்துக்காக தொடக்கம் முதலே ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த சூழலில் நள்ளிரவு காட்சிக்காக மாலை முதலே திரையரங்குகளின் வாசலில் பல அடி உயரம் கொண்ட கட் அவுட்கள் வைத்து அதற்கு மாலையிட்டும், பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்