சென்னை: மலையாள நடிகர் டோவினோ தாமஸ், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டோவினோ தாமஸ் நெகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நான் நடிகனாக ஆக வேண்டும் என ஆசைப்பட்ட நாட்களில் இருவரும், அவரவர் வழியில் எனக்கு உத்வேகம் அளித்தனர். இன்று இந்த இரண்டு அற்புதமான நடிகர்களின் நடுவே நான் நிற்பதன் மூலம் எனது பயணத்தில் அவர்களின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். இருவருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. கார்த்தியின் ‘மெய்யழகன்’ திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம், சூர்யா படத்தில் டோவினோ தாமஸ் நடிக்கிறாரா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
டோவினோ தாமஸை பொறுத்தவரை, அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘அஜயன்டே ரண்டாம் மோஷனம்’ படம் வெளியாகி அதன் திரையனுபவத்தால் கவனம் பெற்றது. சூர்யா தற்போது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கார்த்தியை பொறுத்தவரை அவர் நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
» “காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் தயார்” - கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ குறித்து சென்சார் போர்டு
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago