பூந்தமல்லி: ‘பிக் பாஸ்’ செட்டில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி காயம்

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தனியார் பிலிம் சிட்டியில் ‘பிக் பாஸ்’ செட்டில் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் பிலிம் சிட்டி அமைந்துள்ளது. இங்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான செட் அமைத்து படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தனியார் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு இங்கு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘பிக் பாஸ்’ 8-வது சீசன் தொடங்க உள்ளதால், அந்த வீட்டின் உட்பகுதியில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில், சாயின் கான்( 47) உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் இன்று (செப்.25) காலை ஈடுபட்டனர். அப்போது, சாயின் கான், எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி உயரத்தில் இருந்து, தவறி கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த சாயின் கானை, சக தொழிலாளர்கள் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நசரத்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்