“தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இனி என் இசை நிகழ்ச்சி” - இளையராஜா நெகிழ்ச்சிப் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், “பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14-ம் தேதி கும்பகோணத்தின் தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. தலைநகரைத் தாண்டி மற்ற மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே விட்டு விட்டு மிதமான மழை பெய்துக்கொண்டிருந்தது. இதனால் நிகழ்ச்சி தொடங்க காலதாமதமானது. ஆனாலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் இசை நிகழ்ச்சியை காண காத்திருந்தனர். மழை பெய்தபோதிலும் ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்