“கடின உழைப்புக்கு கிடைத்த பலன்” - ‘லாபத்தா லேடீஸ்’ ஆஸ்கர் என்ட்ரிக்கு ஆமீர்கான் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: “எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் கிரண் ராவ் மற்றும் குழுவினரை எண்ணி பெருமைப்படுகிறேன்” என நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லாபத்தா லேடீஸ் திரைப்படம் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தியை மகிழ்ச்சியடைந்தேன். இயக்குநர் கிரண் ராவ் மற்றும் குழுவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தேர்வு குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்துக்கும் அன்பும், ஆதரவும் அளித்த பார்வையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும், ஒட்டுமொத்த திரையுலகத்தினருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி. லாபத்தா லேடீஸ் திரைப்படம் ஆஸ்கர் அகடாமி உறுப்பினர்களை கவரும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை ஆமீர்கான் தயாரித்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் ஆமீர் கான் தயாரிப்பில் வெளியான ‘லகான்’ (2001), ‘தாரே ஜமீன் பர்’ (2007) ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்