சென்னை: நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ‘வாடி வாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது ‘கங்குவா’. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடித்து கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளார்.
ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago