நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்திய சினிமாவில் சிறந்த நட்சத்திர நடிகர் மற்றும் நடன கலைஞர் பிரிவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் ‘மெகா ஸ்டார்’ என அழைக்கப்படும் சிரஞ்சீவி, கடந்த 45 ஆண்டுகளில், 156 படங்களில் நடித்துள்ளார். அதில் 547 பாடல்களில் அவர் 24,000-க்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். பாப், ஜாஸ், ஹிப்ஹாப் என மேற்கத்திய நடனங்களையும், இந்திய கிளாஸிக் நடன அசைவுகளையும் தனது படங்களில் வெளிப்படுத்தி சிறந்த நடன கலைஞராக திகழ்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரை கவுரவப்படுத்தும் விதமாக ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைக்கான அங்கீகாரத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர்கான் வழங்கினார். அவருடன் கின்னஸ் உலக சாதனை குழுவைச் சேர்ந்த ஒருவரும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

இது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “இந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், என் நடனத்துக்காக கவுரவிக்கப்படுவது ஆச்சரியமாக உணர்கிறேன். நடனம் என்பது என் திரையுலக வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்