Laapataa Ladies: இந்தியா சார்பில் ஆஸ்கர் 2025 விருதுக்கு பரிந்துரை

By செய்திப்பிரிவு

சென்னை: சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு ‘Laapataa Ladies’ ( ‘லாபட்டா லேடீஸ்’ ) என்ற இந்தி மொழி திரைப்படத்தை இந்தியா பரிந்துரைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இந்திய திரைப்பட கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளிவந்த படம் ‘லாபட்டா லேடீஸ்’. இந்திய கிராம பகுதிகளில் நிலவும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரத்தை ஹைலைட் செய்து பேசிய படம் இது. இரு புதுமணத் தம்பதிகளை மையமாக கதை நகரும்.

படத்தின் தனித்துவ கதை விவரணைக்காக அதீத கவனம் பெற்றது. இந்நிலையில், கல்கி, அனிமல், சந்து சாம்பியன், ஆட்டம், ஸ்ரீகாந்த் போன்ற படங்களை பின்னுக்கு தள்ளி இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு லாபட்டா லேடீஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘ஆஸ்கருக்கு சிறந்த படம் தேர்வு செய்யப்படும். அந்த பரிந்துரையில் லாபட்டா லேடீஸ் இருந்தால் மகிழ்ச்சி’ என படத்தின் இயக்குநர் கிரண் ராவ் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. வாசிக்க >> Laapataa Ladies - சிரிக்கவைத்தே சமூக அவலங்களைக் கிழிக்கும் சீரியஸ் சினிமா | திரை அலசல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்