ரசிகர்கள் ரகளை, போலீஸ் தடியடி - ‘தேவரா’ விழா ரத்து

By ஸ்டார்க்கர்

ஹைதராபாத்: ரசிகர்களின் அடாவடித்தனத்தால் ஹைதராபாத்தில் நடைபெற இருந்த ‘தேவரா’ படத்தின் விழா ரத்து செய்யப்பட்டது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தேவரா’. ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகவுள்ள ஜூனியர் என்.டி.ஆரின் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. செப்.27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

தமிழ், இந்தி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை ஜூனியர் என்.டி.ஆர் முடித்துவிட்டார். இறுதியாக ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்தும் விழா இன்று (செப்.22) நடைபெற இருந்தது. மழை வரும் என்ற கணிப்பினால், விழாவினை ஹோட்டல் ஒன்றில் திட்டமிட்டு இருந்தார்கள். அங்கு சுமார் 2000 பேர் அமர முடியும்.

இந்த விழாவில் கலந்துக் கொள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில ரசிகர்கள் ஹோட்டலினை உடைத்துக் கொண்டு அரங்கினுள் சென்று அமர்ந்தார்கள். ஹோட்டலுக்குள் மட்டுமே சுமார் 15,000 பேர் வரை கூடிவிட்டார்கள். இதனால் விழாவில் கலந்துக் கொள்ள இருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் யாரும் சொல்லும் வரை கிளம்ப வேண்டாம் என்று கூறியது படக்குழு. போலீஸார் தடியடி நடத்தியதில் ரசிகர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இறுதியாக ‘தேவரா’ விழாவினை ரத்து செய்துவிட்டது படக்குழு.

செப்டம்பர் 27-ம் தேதி நேரடியாக திரையரங்கில் தான் வெளியாகவுள்ளது ‘தேவரா’. ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களின் இந்தச் செயலால் ஹோட்டல் நிர்வாகத்தினர் கடும் அதிருப்தி அடைந்தனர். ஏனென்றால் பல்வேறு பொருட்களை ரசிகர்கள் சேதப்படுத்தி விட்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்