எப்போதும் எம்ஜிஆர் ஃபார்முலாதான்! - பிரபுதேவா

By செய்திப்பிரிவு

பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘பேட்ட ராப்’. வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ப்ளூ ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.ஜெ.சினு இயக்கியுள்ளார். சஃபையர் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் பிரபுதேவா பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றும் போது படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்புதளம் என அனைத்தும் மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் அதனால் அதிகம் படித்தவர்களைக் கண்டால் பயம். பாடலாசிரியர்களை கண்டால் பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் திருத்தம் மேற்கொள்வதுண்டு. நான் எப்போதும் எம்ஜிஆர் ஃபார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். நான் - லீனியர்' பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களை நிச்சயம் கவரும்.

வரும் 27-ம் தேதி ‘பேட்ட ராப்’ வெளியாகிறது. தலைப்புக்காக இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வார்த்தையை எழுதியவர் அவர் தான்” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்