உதயநிதி குறித்த கேள்வி - ரஜினி ஆவேசத்துடன் பதில் கூற மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை நோக்கி ஆவேசமாக பதிலளித்தார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்.20) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்காக ‘கூலி’ படப்பிடிப்பிலிருந்த நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளதாக கூறப்படுகிறதே?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினி, “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். ‘வேட்டையன்’ திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.” என்று பதிலளித்துவிட்டு சென்றார். ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE