சென்னை: ‘மாநாடு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க தேதிகள் பிரச்சினையால் விலகியிருக்கிறார் அரவிந்த் சாமி.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. TIME LOOP முறை கொண்ட இந்தக் கதையினை அனைத்து தரப்பு மக்களும் புரியும் வகையில் படமாக்கி வெற்றியும் பெற்றிருந்தார் வெங்கட்பிரபு.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. ‘மாநாடு’ படத்துக்குப் பிறகே பலரும் அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்ய தொடங்கினார்கள். தற்போது அனைத்து மொழிகளிலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
இதனிடையே, ‘மாநாடு’ படத்தில் ஒரு மாதம் தேதிகள் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்திருக்கிறார் அஅரவிந்த் சாமி. அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப் போனதால், என்னுடைய கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகரை பார்க்க முடியாது என்பதால் அந்தப் படத்தினை இன்னும் பார்க்கவில்லை எனவும் கூறியிருக்கிறார் அரவிந்த் சாமி. அன்று அரவிந்த் சாமி தவறவிட்ட படத்தினால் இன்று அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago