செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்: இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு!

By ஸ்டார்க்கர்

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

‘நானே வருவேன்’ படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்குப் பிறகு பல்வேறு படங்களைத் தொடங்கினாலும் எதுவுமே தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. சமீபத்தில் கூட ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். அதுவும் சில நாட்கள் படப்பிடிப்போடு நின்று போனது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இதனை தான் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்திருப்பதாக கூறுகிறார்கள். இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ படங்களுக்கு பிறகு செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தக் கூட்டணி இணைந்துள்ள படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்