எமர்ஜென்சி பட விவகாரம்: கங்கனாவுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

நடிகையும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள் ளார். இப்படம் செப்.6-ல் வெளியாக இருந்தது. இதில் சீக்கியர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டன.

சண்டிகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் ரவீந்தர் சிங் பாஸி, தாக்கல் செய்த மனுவில், இந்தப் படத்தில் சீக்கிய சமூகத்துக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாகவும் சீக்கியர்களின் மதிப்பை கங்கனா கெடுக்க முயன்றுள்ளார் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை டிச.5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE