“அழகிய லைலாவை விட பூங்கொடி டீச்சரே பிடித்துள்ளது” - நிகிலா விமல் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “அண்மையில் ‘அழகிய லைலா’ என அழைத்தார்கள். ஆனால், ‘அழகிய லைலா’வை விட பூங்கொடி டீச்சர் என அழைப்பது பிடித்திருக்கிறது. ஒரு கதாபாத்திரமாக மக்கள் மனதில் நிற்பது மகிழ்ச்சி” என நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை நிகிலா விமல், “பூங்கொடி என்ற கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்னுடைய நன்றி. அவர் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்வது மிகவும் கடினம். அங்கிருந்து தொடங்கி இங்கே நிற்கிறார். அந்த வாழ்க்கையை ஒரு படமாக எடுத்து, அதிலும் வெற்றி கண்டுள்ளார் என்பது பெரிய விஷயம். அவரின் வாழ்க்கையை தழுவிய படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லோரும் ‘பூங்கொடி டீச்சர்’ என என்னை அழைப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக உணர்கிறேன். அண்மையில் ‘அழகிய லைலா’ என அழைத்தார்கள். ஆனால், ‘அழகிய லைலா’வை விட பூங்கொடி டீச்சர் என அழைப்பதுதான் பிடித்திருக்கிறது. ஒரு கதாபாத்திரமாக மக்கள் மனதில் நிற்பது மகிழ்ச்சி. இந்த சிறுவர்களின் வெற்றியை பார்க்க நான் ஆவலாக இருந்தேன். படக்குழுவுக்கு என்னுடைய நன்றிகள்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE