இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதியுதவி

By ஸ்டார்க்கர்

இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனை அடுத்து இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்து வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

மேலும், இதன் முதற்கட்டமாக நேற்று (செப்.13) 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவருடன் செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி.ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்தார்கள். முதற்கட்டமாக, 2024-ம் ஆண்டில் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு உதவி செய்ய இயக்குநர் சங்கம் முடிவு செய்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்