கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவாவுக்கு லேசான காயம்

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் இன்று விபத்துக்குள்ளான நிலையில், அவரது மனைவி மற்றும் பைக்கில் சென்ற நபர் காயமடைந்தனர்.

நடிகர் ஜீவா இன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே, சென்று கொண்டிருந்த போது, பைக் ஒன்று திடீரென குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக நடிகர் ஜீவா சென்ற கார், பைக் மற்றும் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் ஜீவாவின் மனைவி மற்றும் பைக்கில் வந்த மணிகண்டன் லேசான காயமடைந்தனர். மேலும் ஜீவாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீஸார், நடிகர் ஜீவாவின் மனைவியை சேலம் மருத்துவமனைக்கும், மணிகண்டனை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்