டார்த் வேடர், முஃபாசா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்த ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மரணம்!

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஹாலிவுட் நடிகரும், பின்னணி குரல் கலைஞருமான ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

1931-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், சினிமா என படிப்படியாக வளர்ந்தவர். “Roots: The Next Generations”, “Field of Dreams”, “The Hunt for Red October”, “Coming To America”, “Patriot Games” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் டார்த் வேடர் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியது இவரது பின்னணி குரல் தான். பிரபலமான வில்லன் கதாபாத்திரத்துக்கு தன்னுடைய குரலால் புது அடையாளம் சேர்த்தார் ஜேம்ஸ் ஏர்ல். அதேபோல ‘தி லயன் கிங்’ படத்தில் முஃபாசாவுக்கு இவர் கொடுத்த பின்னணி குரல் காலத்தால் அழியாதது.

எமி விருது, கிராமி விருது, கோல்டன் குளோப், ஆஸ்கார் விருதுகளை வென்றவர் ஜேம்ஸ். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கு ஆஸ்கார் அகாடமி கவுரவித்தது. இந்நிலையில் ஜேம்ஸ் உடல்நலக்குறைவால் இன்று நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ‘தி வால்ட் டிஸ்னி’ நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் இகர், “மென்மையான முபாஃசாவின் குரல் தொடங்கி அச்சுறுத்தும் டார்த் வேடர் வரை திரையுலக வரலாற்றில் சிறந்த கதாபாத்திரங்களுக்கு தனது குரலால் உயிரூட்டிய ஜேம்ஸ், தலைமுறைகள் தாண்டி தனது குரலால் அழியாத முத்திரை பதித்துள்ளார்” என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்