தெலுங்கில் ‘தி கோட்’ ஃப்ளாப் - ‘சிஎஸ்கே’வை சுட்டிக் காட்டும் வெங்கட்பிரபு

By ஸ்டார்க்கர்

இந்தி மற்றும் தெலுங்கில் ‘தி கோட்’ தோல்விக்கு காரணம் என்ன என்று இயக்குநர் வெங்கட்பிரபு காரணம் தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டது. தமிழில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழில் வசூலுக்கு குறைவில்லை.

ஆனால், இந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. குறிப்பாக தெலுங்கில் ‘தி கோட்’ படத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து எக்ஸ் தளத்தில் ஆடியோ வடிவில் உரையாடும் போது பதிலளித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

அதில், “தி கோட் படத்தில் சி.எஸ்.கே அணியின் காட்சிகளால்தான் இந்தி மற்றும் தெலுங்கில் படம் சரியாக போகவில்லை என நினைக்கிறேன். நான் ஒரு சி.எஸ்.கே அணியின் ரசிகன் என்பதால் பெங்களூரு மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். நான் சி.எஸ்.கே அணியின் ஆதரவாளர் என்பது ரத்தத்தில் ஊறியது. அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்