இயக்குநர் நித்திலன் - நயன்தாரா இணையும் ‘மகாராணி’

By ஸ்டார்க்கர்

நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள படத்துக்கு ‘மகாராணி’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யாப், நட்டி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. ஓடிடி தளம் வெளியீட்டிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தினை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இயக்குநர் நித்திலனை அழைத்து பாராட்டினார்கள். ‘மகாராஜா’ படம் வெளியாகும் முன்பே நயன்தாரா நடிக்கவுள்ள படத்தினை இயக்க ஒப்பந்த மாகிவிட்டார் நித்திலன். இதனையும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கு ‘மகாராணி’ என பெயரிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘மகாராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தப் பெயரா அல்லது கதைக்காகவா என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்