சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ டிசம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. டி.சிவா தயாரித்த இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். முழுக்க ஃபிஜி தீவில் படமாக்கப்பட்ட இதில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய பட்டாளமே நடித்திருந்தது.
ஃபிஜியில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது. அங்கும் வேறொரு அரசாங்கம் பதவியேற்றது. இதனால் சான்றிதழ் கிடைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது வெங்கட்பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படம் வசூலில் சாதனை செய்து வருகிறது.
இதனை முன்னிட்டு மீண்டும் ‘பார்ட்டி’ பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சான்றிதழைப் பெற்று படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பு தரப்பு இறங்கியிருக்கிறது. டிசம்பரில் பட வெளியீடு இருக்கும் என்று டி.சிவா அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago