தனது படங்களின் மூலம் ஆமிர்கான் தொடங்கவுள்ள திட்டத்தினை வைத்து திரையுலகினர் ஆச்சர்யப்பட்டு இருக்கிறார்கள்.
கரோனா காலத்திற்கு முன்பு வரை திரையரங்குகளில் தான் முதலில் படங்கள் வெளியாகின. அப்போது படங்களில் டிஜிட்டல் நிறுவனங்களின் பதிவுகள் எதுவுமே இருக்காது. அந்த நிலை இப்போது மாறிவிட்டது. இப்போது முழுமையாக டிஜிட்டல் நிறுவனங்களின் கைகளில் சினிமா சென்றுவிட்டது. அவர்கள் சொன்ன தேதியில் பட வெளியீடு, கதைகளில் தலையீடு என பல்வேறு சிக்கல்கள் திரையுலகினருக்கு ஏற்பட்டுள்ளன.
இதனை கலைவதற்கு தனது அடுத்த படத்தின் மூலம் பழைய முயற்சியினை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் ஆமிர்கான். ‘சிட்ரே ஜமீன் பர்’ படத்தின் எந்தவொரு போஸ்டர், ட்ரெய்லர் மற்றும் படத்தில் டிஜிட்டல் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் லோகோக்கள் எதுவுமே இடம்பெறாது. படத்தினை திரையரங்கில் மட்டுமே வெளியிட்டு, அதன் வரவேற்பை முன்வைத்து டிஜிட்டல் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்திருக்கிறார்.
இந்த முடிவு தொடர்பாக தனது முதலீட்டாளர்கள், படக்குழுவினர் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முடிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரையரங்கில் மட்டுமே சில வாரங்களுக்கு தனது படத்தினை காண முடியும் என முடிவு செய்திருக்கிறார்.
» விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மிஷ்கின்
» நான் சச்சினை ‘சார்’ என்று தான் அழைப்பேன்: முன்னாள் பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சிப் பகிர்வு
டிசம்பர் 20-ம் தேதி ’சிட்ரே ஜமீன் பர்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. விரைவில் ஆமிர்கானின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago