மும்பை: நடிகர் அமிதாப் பச்சன், சேனல் ஒன்றில், ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 16-வது சீசன் இப்போது நடத்தி வருகிறார். இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ‘திருமணமாகாத பெண் குடும்பத்தின் சுமை’ என்று கூறியதால் அமிதாப் பச்சன் கோபமடைந்தார்.
இந்நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், கிருஷ்ணா செலுகர் என்ற போட்டியாளர் கலந்துகொண்டார். கரோனா காலகட்டத்தில் வேலையை இழந்த அவர், திருமணமாகாத பெண்களுடன் தனது நிலையை ஒப்பிட்டார். "திருமணமாகாத பெண் குடும்பத்துக்குச் சுமை என்று நான் சொன்னால், குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு வேலையில்லாத ஆணும் சுமைதான்” என்றார்.
இதனால் கோபமான அமிதாப் பச்சன், “உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? ஒரு பெண் ஒருபோதும் குடும்பத்துக்கு பாரமாக இருக்க மாட்டாள். அவள் எப்போதும் ஒரு பெருமை” என்றார். அமிதாப்பச்சனின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago