விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் உலக அளவில் ரூ.126 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வியாழக்கிழமை (செப்.5) திரையரங்குகளில் வெளியானது. நிறைய சர்ப்ரைஸ்களும், திரையரங்க அனுபவத்தையும் படம் உறுதி செய்கிறது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு தரப்பினர் பலவீனமான திரைக்கதை படத்துக்கு வலு சேர்க்கவில்லை என்கின்றனர். இப்படியான கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. | விமர்சனத்தை வாசிக்க: The GOAT Review: நடிகர் பட்டாளம், சர்ப்ரைஸ் அணிவகுப்பு மட்டும் போதுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்