சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் குறித்த நெட்டிசன்களின் பார்வை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிநேகா, பிரபு தேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர்கள் பட்டாளமும், சர்ப்ரைஸ் தருணங்களும், சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் அழுத்தமான திரைக்கதை இல்லாததையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, ‘இது ஒரு டீசன்ட்டான என்டென்டெய்னர்’ என்ற கருத்தை பரவலாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது, இந்தப் படத்துக்கு மிகுந்த பாசிட்டிவாக அமைந்துள்ளது.
அமுத பாரதி என்பவர், படத்தின் க்ளைமாக்ஸ் சிறப்பாக உள்ளதாகவும், போலவே சிறப்பாக ஹை பாயின்ட்ஸ் ரசிக்க வைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
அக்பர் என்ற நெட்டிசன், “தி கோட் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம்” என பரிந்துரைத்து அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
» நானியின் புதிய படம் ‘Hit: The 3rd Case’ - அறிமுக வீடியோ எப்படி?
» “விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு” - ‘தி கோட்’ குறித்து யுவன் நெகிழ்ச்சி
#GOAT Review : MUST WATCH!!
Exceeded all the expectations Commercial cinema at its best! Engaging first half Peak second half Banger climax Intresting cameos Deaging work very good Overall a Thalapathy Vijay show
Rating - 4.7/5 pic.twitter.com/T6dbmFSHqd— Akbar (@VJakbar_) September 4, 2024
கிறிஸ்டோஃபர் கனகராஜ் என்ற நெட்டிசன், படத்தின் பாசிட்டிவ் அம்சங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
Thalapathy
Matta Song
Interval Block
Topstar’s Emotional Scenes
Premji, Yogibabu Comedy
Climax Cameo & Reference #TheGreatestOfAllTime— Christopher Kanagaraj (@Chrissuccess) September 5, 2024
இது ஒரு சுமாரான படம் எனவும், எளிதாக கணிக்க கூடிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
#GOAT ~ Strictly Avg
Decent 1st half, Avg Second half
Except for few clap worthy moments, predictable/flat padam.
Deaging work niced
Yuvan Bgm work - Decent
Thalapathy
VP trying to do an atlee & Delivered ATM rehash
2.5/5
May work in TN BoxOffice #GOATFDFS pic.twitter.com/tbL834uldD— SHK (@ItsmeShk) September 5, 2024
மற்றொருவர், “முதல் பாதி சுமார். லாஜிக் பார்க்க வேண்டாம். விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்” என பதிவிட்டுள்ளார்.
#GOAT
Neat Entertainer
நிறைய தியேட்டர் Moments இருக்கு.
First Half Screenplay மட்டும் தான் சுமார்.
Climax 15 Mins Blast Moment
AI Workout ஆகல.
பாடல்கள் படத்துலயும் செட் ஆகல.யுவன் BGM Average.
மத்தபடி லாஜிக் பார்க்காம Screenல வர்ற Magic மட்டும் பார்த்தா நல்லா Enjoy பண்ணலாம்.… pic.twitter.com/iKaEkJjc5w— Ranjith Kannan (@PaRanjithKannan) September 5, 2024
படத்தின் தொடக்கம் சிறப்பாக இருந்ததாகவும், அதன்பிறகான திரைக்கதை திருப்தி அளிக்கவில்லை என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
#TheGreatestAllTime மிஷன் இம்பாசிபிள் பாகங்களின் குழுவினரை நினைவூட்டும் படியான ஆரம்பகட்ட காட்சிகள், விஜய்-சினேகா தம்பதிகளின் காட்சிகள் என சிறப்பான தொடக்கத்தை அளித்த திரைப்படம் அப்படியே தொடர்ந்து முடிந்திருக்கலாம். ஆனால், அதற்கு பிறகு நடந்ததெல்லாம் டிராஜடியாகவே இருக்கின்றது. pic.twitter.com/lXfkdv73Kj
— ச.கருணாநிதி (@karna_sakthi) September 5, 2024
வாசிக்க > The GOAT Review: நடிகர் பட்டாளம், சர்ப்ரைஸ் அணிவகுப்பு மட்டும் போதுமா?
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago