ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை நாயகனாக்க இயக்குநர்கள் பலர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். மேலும், இந்திய நடிகர்களில் அதிக வருமானவரி கட்டுபவரும் ஷாருக்கான் தான். கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ‘ஜவான்’ மற்றும் ‘பதான்’ இரண்டுமே ரூ.1,000 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை புரிந்தது.
தற்போது தன்னுடைய மகள் சுஹானா கானுடன் இணைந்து ‘கிங்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்தப் படத்தின் மூலம் தனது மகளை அறிமுகப்படுத்துகிறார். அதுமட்டுமன்றி, அவருடைய மகன் ஆர்யன்கானை நாயகனாக அறிமுகப்படுத்துவும் இயக்குநர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
ஏற்கெனவே கரண் ஜோஹர், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் ஷாருக்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் ‘ஸ்டார்டம்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார் ஆர்யன்கான். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்யன்கானை நாயகனாக்க பலரும் முயற்சி செய்வதால், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago