நடிகையும் மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரித்துள்ள இந்தப் படம், செப்.6-ம் தேதி வெளியாக இருந்தது.
இதில் சீக்கியர்களைத் தீவிரவாதிகளாகவும் தேச விரோதிகளாகவும் காண்பித்திருப்பதாகக் கூறி, சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்துக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டன. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதாகக்கூறி பல காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கங்கனா, “என் படத்துக்கும் எமர்ஜென்சி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago