சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ராஜசேகர்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டர் எப்படி? - கறுப்பு வெள்ளையில் மிரட்டலான லுக்கில் கவர்கிறார் சத்யராஜ். கையில் ஒயர் ஒன்றை சுற்றி வைத்துக்கொண்டு அதனை வெறித்துப் பார்க்கிறார். மொட்டை தலை, தாடி, கண்ணாடியுடன் அவரது தோற்றம் கவனிக்க வைக்கிறது. மேலும், இப்படத்தில் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் நண்பரா அல்லது எதிரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை வெளியான ‘கூலி’ கதாபாத்திரங்கள் ஒருவித மிரட்சியுடனும், அநாயசமான உடல் மொழியுடனும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை, சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago