அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
தற்போது வரை 40% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் போதே, ‘பொங்கல் 2025 வெளியீடு’ என்று உறுதிச் செய்யப்பட்டது. இதனிடையே, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களால் தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் நவம்பர் அல்லது டிசம்பரில் தான் வெளியீடு இருக்கும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத இடைவெளியில் அஜித் நடிப்பில் அடுத்த படம் வெளியீடு சாத்தியமில்லை என்ற பேச்சு நிலவியது. இதனை பொய்யாக்கும் விதமாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘மதுவடலரா 2’ படவிழாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிசங்கர் “‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு தமிழில் வெளியாகவுள்ளது. அதே சமயத்தில் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2 மாத இடைவெளியில் அஜித்தின் 2 படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago