சென்னை: தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிங்கிள் எப்படி? - ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை, சுபலாஷினி, ஜி வி பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு இணைந்து பாடியுள்ளனர். வரிகளை அறிவு எழுதியுள்ளார். உற்சாகம் கூட்டும் வெஸ்டர்ன், ரேப் கலந்த ஃபோக் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழும், ஆங்கிலமும் கலந்த இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் தான் மேலோங்கி உள்ளன. “கோல்டன் ஸ்பாரோ, என் நெஞ்சுல ஏரோ” என தொடங்கும் பாடலில் நடுவில் அறிவின் ‘ராப்’ கவனம் பெறுகிறது.
“நானே பொயட்டு, எங்க என் டூயட்டு”, “இறுக்கி பிடிக்கவா, இலக்கணம் படிக்கவா”, “நீ எக்ஸாமுல ஃபெயில் ஆனாலும் வெக்ஸ் ஆக மாட்டேன்” என வரிகள் எதுகை மோனையை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. ஜாலியான 2கே கிட்ஸ் பாடலாக உருவாகியிருக்கிறது. இப்பாடலில் சிறப்பு தோற்றத்தில் பிரியங்கா மோகன் நடனமாடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
» லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’யில் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!
» மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு
இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிங்கிள் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago