சென்னை: சதீஷ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெரினா’, ‘வாகை சுடவா’, ‘தாண்டவம்’, ‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’.
இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
» டிச.20-ல் ரிலீஸ் ஆகிறது வெற்றிமாறனின் ‘விடுதலை 2’
» லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’யில் நாகார்ஜுனா கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!