‘லப்பர் பந்து’ ட்ரெய்லர் எப்படி? | தினேஷ் vs ஹரிஷ் கல்யாண் மோதலும் கிரிக்கெட்டும்! 

By செய்திப்பிரிவு

சென்னை: அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: “சவுரவ் கங்குலி மட்டும் ஜார்கண்ட் பக்கம் போகாம நம்ம கடலூர் வந்திருந்தா தோனிக்கு பதிலாக நம்ம கெத்து கிடைச்சிருப்பாரு” என்ற வசனத்துடன் அறிமுகமாகிறார் ‘அட்டக்கத்தி’ தினேஷ். ட்ரெய்லரில் நடிகர் விஜயகாந்த், கிரிக்கெட்டர்கள் தோனி, கங்குலி ரெஃபரன்ஸ்கள் வந்து செல்கின்றன. தினேஷ் வயதான தோற்றத்திலும், ஹரிஷ் கல்யாண் இளம் தோற்றத்திலும் காட்சிப்படுத்தபட்டுள்ளனர்.

கிரிக்கெட்டுக்கு நடுவே காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘என்ன ஆளுங்க’ போன்ற வசனங்கள் மூலம் சாதியத்துக்கு எதிரான குரலையும் படம் பதிவு செய்யும் என தெரிகிறது. மொத்த ட்ரெய்லரும், தினேஷும், ஹரிஷ் கல்யாணும் முறைத்துகொண்டும், கிரிக்கெட்டின் வழியே மோதியும் கொள்கிறார்கள். பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. படம் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

லப்பர் பந்து: ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. ‘சர்தார்’, ‘ரன்பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்