சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’, வினோத்ராஜ் இயக்கியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாழை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் பொன்வேல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாக கூறப்படும் இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.3 - 5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், முதல் நாளில் ரூ.1.15 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது. வரவேற்பின் காரணமாக சில திரையரங்குகள், முதல் நாளைக் காட்டிலும், கூடுதல் காட்சிகளை திரையிட்டு வருகின்றன. இதனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது. | > படத்தின் விமர்சனத்தை வாசிக்க: வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
கொட்டுக்காளி: பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே. புரொடக்ஷன் மூலம் தயாரித்துள்ளார். பாடல்களோ, பின்னணி இசையோ இல்லாமல் இப்படம் உருவாகியுள்ளது. ஆணாதிக்கம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அழுத்தமான படைப்பான இப்படத்தில் சூரி, அன்னா பென் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. பரவலான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. ரூ.1 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் முதல் நாளில் ரூ.50 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்தின் காட்சிகளும் திரையரங்குகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன. மால்களில் படத்தின் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது. மேலும் சத்யம் போன்ற பிரதான திரையரங்குகளிலும் படத்தின் காட்சிகள் முதல் நாளை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. | > படத்தின் விமர்சனத்தை வாசிக்க: கொட்டுக்காளி Review: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு!
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago