சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார். அடுத்து 2 வருடமாக அவர் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைப்பிடப்படாத இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. முன்னதாக ‘19(1)(a)’ மலையாள படத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago