சென்னை: நடிகை மேகா ஆகாஷுக்கு அவரது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ’வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், சாய் விஷ்ணு என்பவரை மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்தார். எனினும் தன்னுடைய காதலைப் பற்றி வெளியே சொல்லாமல் இருந்தவந்த அவர், முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
» “ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் கடும் நடவடிக்கை தேவை” - டோவினோ தாமஸ்
» “நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்?” - விவாகரத்து வதந்தியால் பாவனா ஆதங்கம்
அதில், “என்னுடை ‘விஷ்’ உண்மையாகிவிட்டது. இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago