பிரேமலதாவுக்கு நேரில் நன்றி கூறிய விஜய் - ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தி கோட்’ படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ‘ஏஐ’ மூலம் இடம்பெறும் நிலையில், நடிகர் விஜய் இன்று (திங்கட்கிழமை) தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. வரும் செப்டம்பர் 5-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதனை அண்மையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய், பிரேமலதாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நன்றி தெரிவித்த பின் விஜயகாந்தின் உருவப்படத்துக்கு நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, “விஜயகாந்த் ஆசியுடன் ‘தி கோட்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்