மும்பை: ‘கல்கி 2898 ஏடி’படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருந்தார் என இந்தி நடிகர் அர்ஷத் வார்ஸி விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அர்ஷத் வார்ஸி கூறியதாவது: ‘கல்கி’ படம் பார்த்தேன். எனக்கு அப்படம் பிடிக்கவில்லை. மிகவும் வலிக்கிறது. அமிதாப் பச்சனை என்ன சொல்வது. நம்பவே முடியவில்லை. என்னால் அந்த மனிதரை புரிந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு இருக்கும் சக்தி எனக்கு இருந்தால், நமது வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும்.
பிரபாஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு ஜோக்கர் போல இருந்தார். ஏன் அப்படி? நான் ஒரு ‘மேட் மேக்ஸ்’ போன்ற படத்தை காண விரும்பினேன். மெல் கிப்ஸன் படத்தை பார்க்க விரும்பினேன். ஆனால் நீங்கள் என்ன எடுத்து வைத்திருக்கிறீர்கள்? எனக்கு புரியாத விஷயங்களை ஏன் அவர்கள் செய்கிறார்கள்?. இவ்வாறு அர்ஷத் தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபாஸ் ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
» “ஆக்ஷன் படங்களின் அடிப்படை மாணிக்கம் - பாட்ஷா தான்!” - எஸ்.ஜே.சூர்யா
» நாட்டிய ராணி: பாதியில் வெளியேறிய நாயகி; கதையை மாற்றிய தயாரிப்பு!
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago